ADR Indicator இல்லாமல் Market Sentiment - ஐ கணிப்பது எப்படி ?

Brokerage Free Team •May 14, 2025 | 1 min read • 79 views

பங்குசந்தையில் வெற்றிகரமான ட்ரேடிங் செய்யும் முன், நாம் ஒரு விஷயத்தை மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும் – அது தான் மார்க்கெட் சென்டிமெண்ட் (Market Sentiment).

 

அதாவது, தற்போது சந்தை புல்லிஷா இருக்கா (மேலேறக்கூடிய நிலை) அல்லது பேரிஷா இருக்கா (கீழேறக்கூடிய நிலை)? இது போல சந்தையின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது ஒரு சவால் எனலாம். ஆனால், அதே நேரத்தில் அதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது தான் ஒரு நல்ல ட்ரேடரின் தகுதி.

மார்க்கெட் ஸ்ட்ரக்சர் & சென்டிமெண்ட் : 

சந்தையின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு நீங்கள் ஏதேனும் இன்டிகேட்டர் (Indicator) தேவைப்படுமா? இல்லை. உண்மையில், சில நேரங்களில் எந்த ஒரு இன்டிகேட்டருக்கும் உதவிக்கொண்டு இல்லாமலேயே, மார்க்கெட் சென்டிமென்ட் கண்டறியலாம். அது எப்படி? அதற்கான தீர்வு தான் ADR (Advance Decline Ratio).

ADR (Advance Decline Ratio) என்றால் என்ன?

இது ஒரு மிக எளிமையான கருவி. இதில் நாம் ஒரு குறிப்பிட்ட சந்தை (பொதுவாக நிப்டி 500 அல்லது நிப்டி 50) இல் ள்ள:

  • எத்தனை ஸ்டாக்குகள் மேலேறியுள்ளன? (Advances)
  • எத்தனை ஸ்டாக்குகள் கீழ் இறங்கி உள்ளன? (Declines)

இரண்டையும் compare செய்து, சந்தையின் தற்போதைய சென்டிமென்ட்டை தெரிந்துகொள்ளலாம்.

எங்கு பார்க்கலாம் இந்த ADR?

Zerodha தங்களது Zerodha Technicals பகுதியில் நிப்டி 500-க்கு இது போன்ற ஒரு advanced decliner ratio graph ஐ கொடுத்துள்ளனர். இது live ஆக update ஆகும். அதாவது மார்க்கெட் ஓபன் ஆகும் போதே இங்கு வந்து பார்க்கலாம்:

  • எத்தனை ஸ்டாக்ஸ் மேலேறியுள்ளன?
  • எத்தனை ஸ்டாக்ஸ் கீழ் இறங்கி உள்ளன?
  • அவற்றின் சதவீதம் என்ன?
  • Trend தற்போது எதுபக்கம் களமிறங்குகிறது?

இது போன்ற தகவல்கள் நேரடியாகக் கிடைக்கும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்

நீங்கள் இந்த டூலை பார்த்தபோது, 53% ஸ்டாக்ஸ் மேலேறி இருக்கின்றன, 47% ஸ்டாக்ஸ் கீழ் இறங்கி இருக்கின்றன என்றால், சந்தை மெதுவாக புல்லிஷ் சைடாக மாறுகிறது என்று நீங்கள் நம்பலாம். இதே போல, அதிகமாக Decline இருக்குமானால், பேரிஷ் நிலை தொடரக்கூடும்.

இப்படி சிம்பிளா மார்க்கெட் சென்டிமென்ட் தெரிஞ்சுக்கணும்னா...!

நீங்கள் புதிய ட்ரேடராக இருந்தாலும், இதுபோன்ற சின்ன விஷயங்களை Note செய்தால், சந்தையில் உணர்வுபூர்வமான முடிவுகள் எடுக்காமல், நியாயமான முடிவுகள் எடுக்கலாம்.

இந்த ADR ரேஷியோவை நீங்கள் இன்னொரு trend-following indicator, volume, or price action ஆகியவற்றுடன் இணைத்து பயன்படுத்தினால் – ஒரு high-confidence trade எடுக்க முடியும்.

முக்கிய அறிவிப்பு: Zerodha Account Open செய்ய விருப்பமா?

நீங்கள் Zerodha-வில் புதிய கணக்கு திறக்க விரும்பினால், அல்லது உங்கள் நண்பர்களை refer செய்ய விரும்பினால் – Zerodha-வின் தமிழக பார்ட்னராக நாங்கள் இருக்கிறோம், எங்களிடம் உங்கள் Demat கணக்கை திறக்கலாம்.

  • Account Opening – Free!
  • தமிழில் Lifetime Support
  • ஏமாற்றமான YouTube Ads-களில் சிக்க வேண்டாம்
  • Zerodha Website-ல் எங்கள் Partner Franchise தகவல் தெளிவாக உள்ளது

முடிவுரை:

Market Sentiment என்பது ஒரு ட்ரேடரின் வெற்றிக்கான முக்கியமான ஒன்று. அது புல்லிஷா? பேரிஷா? அல்லது நியூட்ரலா? என்பதைத் தீர்மானிக்க ADR போன்ற கருவிகள் உதவுகின்றன.

 

Discussion