Share market-ல் LTCG வரியை குறைப்பது எப்படி ?

Brokerage Free Team •May 6, 2025 | 1 min read • 28 views

ஷேர் மார்க்கெட்டில் டாக்ஸ் (Tax) குறைக்கும் நுணுக்கமான வழிகள்!

இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் பலருக்கும், இந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் லாபத்தில் அரசு எடுக்கும் "Tax" குறித்த புரிதல் இல்லை. அதிலும் குறிப்பாக, "Tax Avoid" (வரிவிலக்கு பெறும்) முறைகள் பற்றி தெரியாதவர்களே அதிகம். இந்த கட்டுரையில் நாம் அதைப்பற்றி விரிவாக பார்க்கப்போகிறோம்.

எல்டிசிஜி (LTCG) என்றால் என்ன?

ஷேர் மார்க்கெட்டில் "LTCG" என்பது Long Term Capital Gains என்பதை குறிக்கிறது. இதன் பொருள், நீங்கள் ஒரு ஷேர் வாங்கி 1 வருடம் கழித்து விற்பது என்றால், அதில் வரும் லாபம் LTCG ஆகும். உதாரணமாக, நீங்கள் 2023ல் ஒரு ஷேர் வாங்கி அதை 2025ல் விற்கிறீர்கள் என்றால்,அதில் வரும் லாபம் LTCG ஆகும்.

LTCG-க்கு தற்போது உள்ள வரி வீதம் என்ன?

தற்போது இந்தியாவில் ₹1,25,000 வரை வருமானம் வந்தால், அதில் Tax எதுவும் கட்ட வேண்டியதில்லை. ஆனால் அதற்கு மேலான லாபத்திற்கு, 12.5% வரி கட்ட வேண்டியுள்ளது. 

 

எடுத்துக்காட்டு: நீங்கள் ஒரு வருடம் கழித்து ₹1,50,000 லாபம் பெற்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் முதல் ₹1,25,000 வரை வரிவிலக்கு கிடைக்கும். மீதமுள்ள ₹25,000க்கு மட்டும் 12.5% வரி = ₹3,125 கட்ட வேண்டியிருக்கும்.

கவனிக்க வேண்டியவை : 

இந்த LTCG வரி என்பது 1 வருடத்திற்கு மேல் வைத்திருந்த முதலீட்டுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் இன்று வாங்கி நாளை விற்றால் இது Short Term Capital Gain ஆகும். அதற்கான வரி விதிமுறைகள் வேறாக இருக்கும்.

Tax குறைக்க ஒரு நுணுக்கமான வழி – Family Demat Accounts

நீங்கள் ஒரு பெரிய முதலீட்டாளர் என்றால், Tax ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க ஒரு சரியான வழி உள்ளது அது தான் Family Demat Account முறை. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் தனித் தனி Demat accounts ஓபன் செய்யவும். உங்களுடைய முதலீட்டை பல பாகங்களாக பிரித்து அந்த கணக்குகளில் முதலீடு செய்யவும். இதனால், ஒவ்வொரு கணக்கும் தனி வரி கணக்காக செயல்படும், மேலும் உங்கள் ஒட்டுமொத்த வரிப்பொருள் குறைய வாய்ப்பு உண்டு.

எச்சரிக்கை:

Family Account என்பது, உங்கள் நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே டிமாட் கணக்குகளை திறப்பது தான் பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதும். வெளிநபர்கள் பெயரில் கணக்கு வைத்தல் தவிர்க்கப்பட வேண்டியது, அது சட்டத்தை மீறி, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Zerodha மூலம் Demat Account ஓபன் செய்யலாம்!

இந்தியாவின் முன்னணி ப்ரோக்கராக Zerodha நமக்கு அதிக நன்மைகளை தருகிறது. நீங்கள் தமிழ்நாட்டில் உள்ளீர்கள் என்றால், Zerodha-வின் தமிழ்நாடு பாட்னராக செயல்படும் "Brokerage Free" நிறுவனத்தில் நேரடியாக கணக்கு திறக்கலாம்.

மேலும் தகவலுக்கு:

  • Call: 7502014555 / 1800-309-4020
  • Free Demat Account + Technical Analysis Course வழங்கப்படுகிறது

முடிவுரை : 

வரி செலுத்துவது தவறு இல்லை; ஆனால் அதை சட்டபூர்வமான முறையில் குறைப்பது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்டகால முதலீட்டு திட்டத்துடன் செயல்பட்டால், வரியின் சுமையை குறைத்து, நிதிச்சுதந்திரத்தை எளிதாக அடைய முடியும்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 25872 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 13914 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13314 views