FOMO (Fear of Missing Out) – பங்குச்சந்தையில் நம்மை தவறவைக்கும் ஒரு மனநிலை!

Brokerage Free Team •May 10, 2025 | 1 min read • 67 views

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது நம்மை பாதிக்கும் முக்கியமான மனநிலைகளில் ஒன்று – FOMO (Fear of Missing Out). இது தமிழில் சொன்னால் வாய்ப்பு கையில் வரவில்லையோ? என்ற பயம்.

FOMO என்றால் என்ன?

FOMO என்பது “Fear of Missing Out” என்ற ஆங்கிலச் சொல்லுக்கான சுருக்கம். பங்குச்சந்தையில் இது ஒரு ஸ்டாக் திடீரென ஏற்றமடையும் போது, நம்மால இந்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது. அப்படிங்கற பயத்தால, அதன் காரணமோ, காரணமில்லாமலோ அந்த ஸ்டாக்கை நம்ம வாங்கி விடும் மனநிலையை குறிக்கிறது.

ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்:

ஒரு ஸ்டாக் ₹120க்கு ட்ரேடாகுது. திடீர்னு அது ₹128க்கு ஏறுது.

நம்முடைய மனதில் வந்த டப்பிள் கேள்விகள்:

  • "இதுவே இன்னும் போய்டுமோ?"
  • "நாம இப்பவே வாங்கணும் போல"
  • "மறுபடியும் இந்த லெவலுக்கு வருமா?"

இந்த பயத்தில திடீர்னு நம்ம அந்த ஸ்டாக்கை வாங்குவோம். ஆனால், சில நேரங்களில் அந்த ஸ்டாக் மீண்டும் ₹120க்கு வந்துடும். அப்போ நம்ம வாங்கிய நேரம் தப்பாகி, நஷ்டத்தில் முடியும்.

FOMO-வால் ஏற்படும் பாதிப்புகள்:

  • தவறான நேரத்தில் பங்கு வாங்குவது
  • பங்கு ஏன் ஏறுது என்பதைப் புரியாமல் முதலீடு செய்வது
  • நஷ்டத்துக்கு ஆளாவதற்கான அதிக வாய்ப்பு
  • Panic Sell பண்ணும் சூழ்நிலை ஏற்படுவது

எப்படி FOMO-வை தவிர்ப்பது?

  1. ஏன் பங்கு ஏறுது? – காரணத்தை கவனிக்கவும்
  2. தொலைநோக்கு பார்வை வைக்கவும் – ஒரே நாளில் பணம் வராது
  3. Technical & Fundamental Analysis பண்ணுங்க
  4. Self-discipline வளர்க்கவும் – பிறர் எதை செய்கிறார்கள் என்பதை நம்பி முதலீடு செய்யாதீர்கள்
  5. Plan your entry & exit – வர்ணனை இல்லாமல் பங்குகளை வாங்க வேண்டாம்

மனநிலைமீது கட்டுப்பாடு முக்கியம்!

பல முதலீட்டாளர்களும் மற்றும் ட்ரேடர்களும் FOMO காரணமாக நஷ்டத்தை சந்திக்கிறார்கள். மாறாக, தாராளமாக சிந்தித்து, சந்தையின் தருணங்களை புரிந்து கொண்டு செயல்படுகிறவர்கள் நீண்டகாலத்தில் வெற்றிபெறுகிறார்கள்.

முடிவுரை:

பங்குச்சந்தையில் வெற்றி பெற வேண்டுமானால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். FOMO என்பது ஒரு உணர்ச்சி – அத நீங்கள் அடக்கினால், சந்தையில் நீடித்து நின்று லாபம் ஈட்ட முடியுமானது. முயற்சி செய்கிற உங்கள் பயணத்தில் இந்த தகவல் உதவியாக இருக்கட்டும்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 26453 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14035 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13417 views