இந்தியாவில் பங்கு முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாகியிருக்கும் இரண்டு முன்னணி ப்ரோகர்கள் என்பவர்கள் Zerodha மற்றும் Groww ஆகும். ஆனால் யாரிடம் கணக்கு தொடங்குவது சிறந்தது? என்ற கேள்விக்கு சரியான பதிலை அறிய, இந்த இரண்டு ப்ரோகர்களையும் பல அம்சங்களில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அதாவது, இவர்களின் கட்டணங்கள், வழங்கும் வசதிகள், வாடிக்கையாளர் சேவை, அனுபவம், பயன்பாடின் எளிமை போன்ற முக்கியமான comparison அம்சங்களை நாம் விரிவாகப் பார்ப்போம். இதில் நம்மைச் சரியான broker-ஐ தேர்ந்தெடுக்க உதவும் அனைத்து விஷயங்களையும் தெளிவாகக் காணலாம்.
1. Brokerage Charges : Intraday Brokerage:
Broker |
Charges |
Zerodha |
₹20 or 0.03% (எது குறைவோ அதுவும்) |
Groww |
₹20 or 0.01% (எது குறைவோ அதுவும்) |
Delivery Brokerage:
Broker |
Charges |
Zerodha |
Delivery trade-க்கு zero charges |
Groww |
₹20 or 0.1% (எது குறைவோ) |
F&O, Currency, Commodity:
Broker |
Charges |
Zerodha |
₹20 per order |
Groww |
₹20 per order (Currency segment இல்லை) |
Zerodha-வில் currency & commodity இரண்டும் support-ஆகும், Groww-வில் currency கிடையாது.
2. AMC Charges (Annual Maintenance Charges)
Broker |
AMC |
Zerodha |
₹300 + GST |
Groww |
No maintanence charges |
3. Account Opening Charges
Zerodha மற்றும் Groww இரண்டு ப்ரோகர்களும் தங்களுடைய ப்ரோக்கரேஜ் சேவைகளை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், எந்தவிதமான கணக்கு தொடக்க கட்டணமும் (Account Opening Charges) வசூலிக்கவில்லை. அதாவது, இவர்கள் இருவரிடமும் டிரேடிங் மற்றும் டிமாட் கணக்குகளை முழுமையாக இலவசமாக துவங்கலாம். புதிய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கிறது, ஏனெனில் ஆரம்ப கட்ட முதலீட்டைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.
4. Auto Square-Off Charges
Broker |
Charge |
Time |
Zerodha |
₹50 + GST |
3:20 PM |
Groww |
₹50 + GST |
3:20 PM |
5. DP Charges (Demat Transaction Charges)
Broker |
Charges |
Zerodha |
₹13 + GST |
Groww |
₹15 + GST |
6. Service & Segments Comparison
Zerodha மற்றும் Groww ஆகிய இரண்டும் முதலீட்டாளர்களுக்கு விரிவான சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான பல்வேறு செக்மென்ட்களில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. இருவரிடமும் Equity, Margin Trading Facility (MTF), Initial Public Offering (IPO), Exchange Traded Funds (ETF), Sovereign Gold Bonds (SGB), Stock SIP, Bonds, மற்றும் Mutual Funds என அனைத்து முக்கியமான முதலீட்டு வகைகளும் கிடைக்கின்றன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரே இடத்தில் பல வகையான வாய்ப்புகளை அனுக அனுமதிக்கிறது. Zerodha மற்றும் Groww இரண்டுமே இவை அனைத்தையும் முழுமையாக சப்போர்ட் செய்கின்றன என்பதால், நீங்கள் எந்த ப்ரோகரைத் தேர்ந்தெடுத்தாலும் இவற்றில் எந்தவொரு குறையும் இருக்காது.

7. NRI Account & Branch Facility
Zerodha மற்றும் Groww ஆகிய இரு ப்ரோகர்களிலும் NRI (Non-Resident Indian) கணக்குகளைத் தொடங்கும் வசதி மற்றும் கிளை சேவைகள் அடிப்படையில் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. Zerodha இல் NRI கணக்குகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது மற்றும் அவை ஆஃப்லைன் முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக Zerodha நிறுவனம் கிளைகள் (Branches) மூலம் உதவிகரமான சேவைகளையும் வழங்குகிறது. மற்றபுறம், Groww ப்ரோகரில் NRI கணக்கு திறக்கும் வசதி கிடையாது என்பதுடன், Groww-க்கு எந்தவிதமான கிளை வசதியும் இல்லாது முழுவதுமாக ஆன்லைன் பின்புலத்தில் செயல்படுகிறது. எனவே, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு Zerodha ஒரு சிறந்த தேர்வாக இருக்க முடியும்.
Zerodha - NRI க்கள் மற்றும் offline process விரும்புவோருக்கு சரியான தேர்வு.
8. Trading Platform
Zerodha மற்றும் Groww இருவரும் தங்கள் ப்ரோகரேஜ் சேவைகளுக்காக தனித்தனியாக மென்பொருள் பயன்பாட்டை வழங்குகின்றன. Zerodha பயன்பாட்டாளர்களுக்காக Kite App மற்றும் Web platform ஆகியவற்றை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், advanced traders-க்கு மிகுந்த பயனளிக்கும் சிறப்பு கருவிகளாக Streak (Algo Trading), Sensibull (Options Strategy), Smallcase (Thematic Investing), மற்றும் Tijori (Company Analytics) போன்ற நவீன வசதிகளையும் வழங்குகிறது. மாற்றாக, Groww ப்ரோக்கர் தங்களது Groww App மற்றும் Web Platform மூலமாக Mutual Fund Switch, Order Tracking, SIPs போன்ற புதுமையான ஆனால் அடிப்படையிலான கருவிகள் மூலம் சேவையை வழங்குகிறது. எனவே, புதிய முதலீட்டாளர்கள் மற்றும் Mutual Fund-ல் ஆர்வமுள்ளவர்கள் Groww-ஐ தேர்வு செய்யலாம், ஆனால் திறமையான மற்றும் தொழில்முறை அளவிலான advanced traders-க்கு Zerodha ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
9. 3-in-1 Account Option
Zerodha மற்றும் Groww ப்ரோகர்களில் 3-in-1 கணக்கு வசதி இருக்கும் விதத்தில் முக்கிய வித்தியாசம் உள்ளது. Zerodha ப்ரோக்கர், ICICI Bank, IDFC FIRST Bank போன்ற முன்னணி வங்கிகளுடன் இணைந்து, Trading + Demat + Bank Account ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் இணைத்து பயன்படுத்தும் வகையில் 3-in-1 Account வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பணம் இடமாற்றம், கணக்கு மேலாண்மை, மற்றும் முதலீட்டு செயலிகள் அனைத்தும் எளிதாக நடைபெறுகிறது.
மாறாக, Groww இல் 3-in-1 கணக்கு வசதி கிடையாது, ஏனெனில் அவர்கள் வங்கிகளுடன் இணைந்து செயல்படவில்லை. எனவே, ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் வேண்டும் என்று விரும்பும் முதலீட்டாளர்களுக்கு Zerodha ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
10. Customer Support
Zerodha மற்றும் Groww இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு Email மற்றும் Phone மூலம் ஆதரவு வழங்குகின்றன. எந்தவொரு சந்தேகத்திற்கும் அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கும், முதலீட்டாளர்கள் இந்த இரண்டு வழிகளையும் பயன்படுத்தி உதவியை பெறலாம். எனவே, வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் இரு ப்ரோகர்களும் சமமாக செயல்படுகின்றன என்று கூறலாம். இரண்டும் support தருகிறது, ஆனால் Zerodha-வுக்கு experience support team advantage.
11. Order Features Comparison
Zerodha |
Groww |
buy order |
gtt orders |
sell order |
order book |
sl-order |
mutual fund investments |
sl-m order |
instant order execution |
order book |
switching between funds |
nudge cover order |
order tracking |
bracket order |
advanced order types |
amo order |
bracket orders |
gtt |
cover orders |
basket order holdings |
order confirmation & notifications |
positions |
push notifications |
position conversion |
email confirmation |
funds |
tracking & managing orders |
chart |
order history |
fundamental |
portfolio view |
technicals |
integrated research |
ATO alert etc... |
insights etc... |
12. Company Background
- Zeodha - started in 2010
- Groww - started in 2016 - 2017
முடிவுரை:
- எனவே உங்கள் Trading Style-ஐப் பொருத்து சரியான broker-ஐ தேர்ந்தெடுக்கலாம்.
- நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து Zerodha கணக்கைத் திறக்க விரும்புகிறீர்கள் என்றால், தயங்காமல் கீழ்கண்ட Toll Free எண்ணை அழைக்கவும்:
📞 1800-309-4020
- எந்த ப்ரோக்கரிடம் கணக்கு திறந்தாலும், எங்களின் வாயிலாக சிறப்பான தள்ளுபடி மூலம் – Rs.99க்கு மட்டும் Stock Market Training பெறலாம்!
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.