2025 ஜூலை மாதத்தில், இந்தியாவின் முன்னணி டிஸ்கவுண்ட் ப்ரோக்கரான ஜீரோதா, தனது பயனர்களுக்கு பல புதிய வசதிகளை வழங்கும் வகையில் பல அப்டேட்ஸ்களை கொண்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் ஜீரோதா தனது பயனர்களுக்கு வழங்கியிருந்த ஆர்டர் வகைகள், பை/செல் வசதிகள், மற்றும் Option டிரேடிங் வசதிகளைப் போலவே, இப்போது Fundamentals Widget எனும் ஒரு முக்கியமான அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பதிவு முழுவதும், ஜீரோதாவின் புதிய Fundamentals Widget என்ன, அதை எப்போது பயன்படுத்தலாம், யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் நம்ம விவரமாக தெரிந்து கொள்ள போகிறோம்.
Fundamentals Widget என்றால் என்ன?
பங்குகளை வாங்கும் முன், அந்த நிறுவனம் என்ன வேலை செய்கிறது, எவ்வளவு லாபம் காண்கிறது, மார்க்கெட்டில் அதன் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நம்மில் பலர் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வெப்சைட்களில் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
ஆனால் இப்போது, ஜீரோதா தனது Kite மொபைல் ஆப் மற்றும் வெப் பிளாட்ஃபாரத்தில் Fundamentals எனும் ஒரு விட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், நீங்கள் விரும்பும் எந்த ஒரு ஸ்டாக்கின் அடிப்படை தகவல்களையும் ஒரே இடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த விட்ஜெட்டில் என்னென்ன காணலாம்?
1. கம்பெனி டிஸ்கிரிப்ஷன்
இந்த பங்கின் பின்னணியில் உள்ள நிறுவனம் எதைச் செய்கிறது, அது எந்த துறையைச் சேர்ந்தது, வழங்கும் சேவைகள் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் ஆகியவை குறித்த சுருக்கமான தகவல் வழங்கப்படும்.
2. மார்க்கெட் கேப்
நிறுவனத்தின் அளவைப் பொருத்து அது Large Cap, Mid Cap, அல்லது Small Cap என வகைப்படுத்தப்படுகிறது.
3. முக்கியமான Financial Ratios
- PE Ratio
- Sector PE Ratio
- P/B Ratio
- Dividend Yield
- ROE
- 52 Week High/Low
இவை அனைத்தையும் 1 ஆண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கான வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் காணும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
4. Price Trend vs Index Comparison
ஒரு பங்கு, அதன் உரிய Benchmarked Index (உதா: Nifty Bank) உடன் ஒப்பிடும்போது எப்படி செயல்பட்டது என்பதை காட்சிப்படுத்துகிறது. இதனால், அந்த பங்கின் overall performance ஐ market context-ல் புரிந்துகொள்ள முடியும்.
5. Revenue Breakup
அந்த நிறுவனம் எந்த business segment லிருந்து எவ்வளவு வருமானம் பெறுகிறது என்பது பிரிவுகளாக தரப்படுகிறது:
- Retail Banking
- Corporate/Wholesale Banking
- Treasury
- Insurance Services
இதனுடன், இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து வருமானம் எவ்வளவு என்பதை Geographical Revenue Split வாயிலாக பார்க்கலாம்.
Financials பகுதி
இந்த பகுதியில் ஆண்டு மற்றும் காலாண்டு அடிப்படையில் வருமானம் மற்றும் லாப விவரங்களை பார்க்கலாம்:
- Annual Results – Revenue, Operating Profit, Net Profit
- Quarterly Results – Year-over-Year & Quarter-on-Quarter Comparison
இவை அனைத்தும் நேரடி comparison வாயிலாக காட்டப்படும். மேலும், எந்த ஆண்டு அல்லது காலாண்டில் வளர்ச்சி எவ்வளவு, குறைவு எவ்வளவு என்பது பளிச்சென புரியவைக்கும்.
Shareholding Pattern
இந்த பகுதியில்:
- Promoters எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள்?
- FII (Foreign Institutional Investors) மற்றும் DII (Domestic Institutional Investors) பங்கு எவ்வளவு?
- Retail Investors மற்றும் Others ஆகியோர் என்ன அளவில் பங்குகள் வைத்திருக்கிறார்கள்?
முன் காலாண்டுடன் ஒப்பிட்டு தற்போதைய பங்கு வைத்திருப்பு நிலைமை எப்படி உள்ளது என்பதை தெளிவாகக் காணலாம்.
Peers Comparison
ஒரு பங்குக்கு போட்டியாக இருக்கும் மற்ற நிறுவனங்களின் விவரங்களும் சேர்த்துக் காட்டப்படும். Market Cap, PE Ratio, ROE, Dividend Yield ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Events & Corporate Actions
அந்த பங்குக்கு தொடர்பான முக்கிய நிகழ்வுகள்:
- Declared Dividends
- Annual Reports
- Quarterly Results
இதனை நேரடியாக நிகழ்வு அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
News Section
அந்த ஸ்டாக்கைச் சுற்றி சமீபத்தில் வெளியான முக்கியமான நியூஸ் அல்லது அறிவிப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருக்கும். இதனால் எந்த நேரத்திலும் நீங்கள் அந்த பங்கின் நிலைமையை உணர முடியும்.
ETF Comparison (Exchange Traded Funds)
ETF களுக்கு இந்த Fundamentals widget எப்படி வேலை செய்கிறது என்றால்:
- அந்த ETF எவ்வளவு return கொடுத்திருக்கிறது?
- அதன் portfolio allocation என்ன?
- எந்த sectors மற்றும் asset types-ல் அதிகமான holdings இருக்கு?
- அது மற்ற ETF களுடன் எப்படி ஒப்பிடலாம்?
என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

யாருக்குப் பயனாகும்?
- துவக்க முதலீட்டாளர்கள் – பங்கு தேர்வு செய்வதற்கான தெளிவான அடிப்படை தகவல்களை பெறலாம்.
- தொழில் நிபுணர்கள் – விரைவாக ஒரு ஸ்டாக்கின் current strength-ஐ மதிப்பீடு செய்யலாம்.
- லாங் டெர்ம் முதலீட்டாளர்கள் – நிறுவனம் வளர்ச்சி பாதையில் இருக்கிறதா என்பதை அறிய பயன்படும்.
- ETF ஆர்வலர்கள் – ETF களில் holdings மற்றும் portfolio details ஐ நேரடியாக தெரிந்துகொள்ள உதவும்.
முடிவுரை:
ஜீரோதா அறிமுகப்படுத்தியுள்ள இந்த Fundamentals விட்ஜெட், ஒரு பங்கையோ ETF-யோ வாங்கும் முன் அதன் பின்புலத்தையும், வளர்ச்சி விபரங்களையும் விரிவாக புரிந்துகொள்ள ஒரு அருமையான உதவிக்கரமான கருவியாக திகழ்கிறது. இது நிச்சயமாக, எந்த முதலீட்டாளருக்கும் தனது முடிவுகளை அறிவுடனும், நம்பிக்கையுடனும் எடுக்க உதவும்.
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.