Long Base Pattern – என்றால் என்ன ?

Brokerage Free Team •July 22, 2025 | 1 min read • 28 views

 

பங்கு சந்தையில் நிதானமான பொறுமையுடன் ஆய்வு செய்து முதலீடு செய்யும் இன்வெஸ்டர்களுக்கும், குறிப்பிட்ட கால கட்டத்தில் சிறந்த வாய்ப்புகளை எதிர்பார்க்கும் டிரேடர்களுக்கும் பல்வேறு வகையான டெக்னிக்கல் பேட்டர்ன்கள் வழிகாட்டியாக இருக்கும். அத்தகைய ஒரு பயனுள்ள பேட்டர்ன் தான் Long Base Pattern.

Long Base Pattern என்றால் என்ன?

Long Base Pattern என்பது ஒரு பங்கு தனது விலை வளர்ச்சியை அனுபவித்த பிறகு, நீண்டகாலம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஏற்ற இறக்கமின்றி கன்சாலிடேட் ஆகும் கட்டத்தை குறிக்கும். இந்த நிலைமை, ஒரு புதிய பெரிய புள்ளியில் பங்கின் திசையை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக இருக்கும்.

இந்த பேட்டர்ன் எப்படி உருவாகிறது?

  • முதலில், அந்த பங்கில் ஒரு வலிமையான அப்ட்ரெண்ட் காணப்பட வேண்டும்.
  • அதன் விலை 200% முதல் 300% வரை உயர்ந்திருக்க வேண்டும்.
  • இந்த வளர்ச்சிக்குப் பிறகு, பங்கு 1-2 வருடங்கள் வரை ஒரு ரேஞ்ச் லெவலில் மாறாமலேயே இருக்கும்.
  • இந்த ரேஞ்ச், மேலோ கீழோ பிரேக் அவுட் இல்லாமல் நீளமாக தொடரும்.

 

இது முதலீட்டாளர்களின் பொறுமையை சோதிக்கும் ஒரு கட்டமாக இருக்கும். இந்த ரேஞ்ச் விட்டு பங்கு வெளியேறும்வரை, அந்த பங்கு எந்த திசையிலும் நகராது.

கண்டிஷன்கள் மற்றும் முக்கிய கட்டங்கள்

  1. முந்தைய டிரெண்ட் மிக வலிமையாக இருந்திருக்க வேண்டும்.
  2. கன்சாலிடேஷன் காலம் குறைந்தபட்சம் 1 வருடம் இருக்க வேண்டும்.
  3. அந்த ரேஞ்ச் பிரேக் அவுட் ஆன பிறகு மட்டுமே புதிதாக நுழைய வேண்டும்.
  4. பிரேக் அவுட் ஆன பிறகு, அந்த பங்கு அதே லெவல் - ல் சப்போர்ட் எடுக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
  5. Long Base Pattern பிரேக் ஆன பிறகு, பங்கு மீண்டும் அதே முந்தைய உயர்வு அளவுக்கு மேலே செல்ல வாய்ப்பு அதிகம்.

ஏன் இது முக்கியம்?

இந்த பேட்டர்ன், குறிப்பாக லாங் டெர்ம் முதலீட்டாளர்கள் மற்றும் Back Test செய்யும் ட்ரேடர்களுக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது:

  • பெரிய மூலதன வளர்ச்சிக்கு வாய்ப்பு அளிக்கும்.
  • நிதானமான ரிஸ்க் மேனேஜ்மெண்ட் செய்ய உதவும்.
  • கடந்த கால சார்ட்களை வைத்து சூழ்நிலையை மதிப்பீடு செய்ய வழிவகுக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

  1. உங்களுக்கு பிடித்த ஸ்டாக்ஸ் அல்லது இன்டெக்ஸ்கள் - ல் இந்த பேட்டர்ன் உருவாகிறதா என்று பாருங்கள்.
  2. கடந்த காலச் சார்ட்களை வைத்து Back Test செய்யுங்கள்.
  3. ரேஞ்ச் பிரேக் அவுட் ஆன பிறகு, விலை சப்போர்ட் எடுக்கிறதா? என்பதை உறுதிப்படுத்துங்கள்.
  4. அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி ஆகும்போது மட்டுமே நுழைவது பாதுகாப்பான முடிவாக இருக்கும்.

Black Pattern உடன் ஒப்பீடு : 

பல நேரங்களில், Long Base Pattern மற்றும் Black Pattern ஆகிய இரண்டும், ஒரு பெரிய வளர்ச்சி அலைக்குப் பிறகு ஏற்படும் கன்சாலிடேஷன் கட்டத்தை காட்டும் பொதுவான அடிப்படை விதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எனினும், Long Base Pattern என்பது நேர அளவில் நீடித்து நடைபெறும் தன்மையைக் கொண்டது. இதனால், இது மேலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முடிவுரை : 

பங்குசந்தையில் நிதானமான முடிவுகள் மட்டுமே நீண்டகால வெற்றிக்கு வழிகாட்டும். Long Base Pattern போல சிம்பிளான மற்றும் educative - ஆன patterns, சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். உங்கள் முதலீட்டுத் திட்டங்களில் இந்த பேட்டர்னை பின்பற்றி Back Test செய்து, பங்கு ரேஞ்ச் பிரேக் ஆனதைக் கவனித்து, திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.

 

Discussion