உங்கள் பங்குகளின் Portfolio ஏற்றமா இறக்கமா ?

Brokerage Free Team •May 23, 2025 | 1 min read • 2 views

 

பங்கு சந்தை என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பது இயல்பு. கடந்த சில வாரங்களில், இந்திய பங்கு சந்தையில் நடந்த மார்க்கெட் கரெக்சன் இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துவிட்டது. பல முக்கிய ஸ்டாக்குகள், 35% முதல் 75% வரை வீழ்ச்சியடைந்துள்ளன. இது முதலீட்டாளர்களிடையே ஒரு பதட்டத்தை உருவாக்கியுள்ளன.

 

ஆனால், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறைந்ததையடுத்து, சந்தை மீண்டும் மேல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய நிஃப்டி குறியீடு, 21,744 புள்ளிகளிலிருந்து 25,100 புள்ளிகளுக்கு மாறியுள்ளது. இது மார்ச் 12-ம் தேதியின் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு 10% மேம்பாடு ஆகும்.

நம்முடைய போர்ட்போலியோக்கள் என்ன சொல்கின்றன?

தற்போது பங்கு சந்தையில் உள்ள ஸ்டாக்குகளில் 50% க்கும் மேற்பட்டவை, correction-க்கு முன்புள்ள உச்ச நிலையிலிருந்து முதல் 30% வரை வீழ்ச்சியிலேயே உள்ளன. இதை அடிப்படையாக வைத்து, உங்கள் போர்ட்போலியோவின் நிலையை மதிப்பீடு செய்வது முக்கியம்.

போர்ட்போலியோ மதிப்பீட்டுக்கான வழிகாட்டி:

  • 5% – 12% வீழ்ச்சியிலே உங்கள் போர்ட்போலியோ உள்ளது என்றால், நீங்கள் முதலீடு செய்த ஸ்டாக்குகள் நல்ல குவாலிட்டி கொண்டவை என்பதை இதுவே நிரூபிக்கிறது.
  • 15% – 30% வீழ்ச்சியிலே உள்ளது என்றால், உங்கள் போர்ட்போலியோவில் உள்ள சில ஸ்டாக்களை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

 

இது உங்கள் முதலீட்டுத் தீர்வுகள் புது ரீயாலிட்டியுடன் ஒத்துப்போக வேண்டிய தருணம் என்பதையும் உணர்த்துகிறது.

“Quality Over Quantity”

மார்கெட்டில் அனைத்து ஸ்டாக்குகளும் மேலே செல்லும் போது, சில ஸ்டாக்குகள் மட்டும் கீழே இறங்குவதைக் காணலாம். இது, அந்த ஸ்டாக்குகளின் அடிப்படைத் தன்மைகள் வலுவற்றதாக இருப்பதை குறிக்கின்றது. உங்கள் போர்ட்போலியோவில் சில ஸ்டாக்குகள் மேலே செல்லவில்லை என்றால், அது தவறானது அல்ல. எனினும், அந்த ஸ்டாக்குகளை திருத்தி, அவற்றை மாற்றும் நேரம் வந்திருக்கக்கூடும், என்பதை ஒரு புரிந்துகொள்ளலாம்.

 

புதிய முதலீடுகள் செய்யும் முன், உங்கள் தற்போதைய போர்ட்போலியோவில் உள்ள ஸ்டாக்குகளை கணிக்கவும். அவை long-term growth potential உடையவைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

  1. போர்ட்போலியோ ரிவியூ – உங்கள் தற்போதைய முதலீடுகளை ஒரு spreadsheet-ல் note செய்து performance–ஐ அளவிடுங்கள்.
  2. Fundamentals பார்வை – EPS, PE Ratio, Debt levels, ROCE போன்ற முக்கிய புள்ளிவிவரங்களை பார்த்து quality validate செய்யுங்கள்.
  3. Sector Diversification – ஒரே வகை நிறுவனங்களில் அதிக முதலீடு இருக்கிறதா என்று பாருங்கள்.
  4. Advisor உதவி – உங்களுக்கு தெளிவில்லை என்றால், நம்பகத்தன்மை உள்ள ஒரு Financial Advisor-ஐ அணுகவும்.

முதலீட்டுக்கான முதல் படி – ஒரு நம்பகமான டிமேட் கணக்கு

  • பங்குசந்தையில் முதலீடு செய்யும் முன், உங்களிடம் ஒரு டிமேட் கணக்கு (Demat Account) இருக்க வேண்டும். 
  • இந்தியாவின் முன்னணி ப்ரோக்கர் Zerodha மூலம், நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய டிமேட் கணக்கை திறக்கலாம். மேலும், தமிழ்நாட்டில் Zerodha உடைய அதிகாரப்பூர்வ ப்ராட்னராக Brokerage Free நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

முடிவுரை : 

பங்குச் சந்தையில் கரெக்சன் என்பது ஒரு அதிக வாய்ப்பு கொண்ட நிகழ்வு. உங்கள் போர்ட்போலியோவின் நிலையை உணர்ந்து, அதை மேம்படுத்துவது இந்த நேரத்தில் மிக முக்கியமான பணியாகிறது. சரியான பகுப்பாய்வு, நிதானமான முடிவுகள், மற்றும் தரமான ஸ்டாக்குகள் மூலம் உங்கள் முதலீடுகள் நீண்ட காலத்தில் உயர்வதற்கான பாதையை அமைக்கலாம்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 26535 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14063 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13435 views