Accelerator Oscillator indicator என்றால் என்ன ?

Brokerage Free Team •May 23, 2025 | 1 min read • 2 views

 

Zerodha-வின் Kite platform-ல் இப்போது புதிய ஒரு இண்டிகேட்டர் அறிமுகமாகியுள்ளது. இந்த இண்டிகேட்டர் Accelerator Oscillator என்று அழைக்கப்படுகிறது. இதில் நாம் இண்டிகேட்டரை எப்படி சேர்க்கலாம், அதன் வழியாக சந்தை இயக்கங்களை எப்படி புரிந்து கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

Accelerator Oscillator Indicator என்றால் என்ன ?

இந்த Indicator ஒரு வகை momentum oscillator. இது சந்தையின் வேகத்தை, அதாவது trend-ன் அடுத்த நகர்வை முன்னதாகக் காட்ட முயற்சிக்கிறது. இது அதிகமாக RSI போலவே ஒரு ரேஞ்ச் அடிப்படையில் வேலை செய்யும், ஆனால் அதைவிட வேகமான மாற்றங்களை இண்டிகேட் செய்யும் திறன் கொண்டது.

 

Accelerator Oscillator Indicator என்பது ஒரு technical analysis கருவி (Tool) ஆகும், இது பங்குச் சந்தை, foreign exchange அல்லது பிற நிதி சந்தைகளில் விலை நகர்வுகளை (price movements) கணிக்க உதவுகிறது. இதை Bill Williams என்பவர் உருவாக்கினார்.

 

அதன் பயன்பாடு என்ன? 

இந்தக் குறியீட்டு கருவி, ஒரு பங்கு மற்றும் currency விலை எந்த திசையில் நகர இருக்கிறது என்பதை முன்கூட்டியே காட்ட முயற்சிக்கிறது. இது ஒரு momentum indicator ஆகும். விலை மாற்றத்தின் வேகம் (acceleration/deceleration) எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது. பசுமை (Green) நிறம் – வேகம் அதிகரிக்கிறது. சிவப்பு (Red) நிறம் – வேகம் குறைகிறது.

 

எப்படிச் செயல்படுகிறது? 

Accelerator Oscillator, Awesome Oscillator (AO) - ன் அடிப்படையில் வேலை செய்கிறது. AO மற்றும் அதன் 5-period simple moving average இடையே உள்ள வேறுபாடு தான் Accelerator Oscillator. 

 

வர்த்தகத்துக்கான உதவிகள்: 

பசுமையாக மாறும் போது, வாங்கும் சமயம் என கருதலாம். சிவப்பாக மாறும் போது, விற்கும் சமயம் என கருதலாம். ஆனால், மற்ற குறியீடுகளுடன் சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.

Zerodha Kite-ல் இந்த இண்டிகேட்டரை எப்படி சேர்ப்பது?

  1. Zerodha Kite தளத்தில் உங்கள் நிஃப்டி 50 டே சார்ட்-ஐ திறக்கவும்.
  2. மேலே உள்ள Indicators மெனுவை கிளிக் செய்யவும்.
  3. அங்கே இருந்து Accelerator Oscillator என்பதை தேர்வு செய்யவும்.
  4. செட்டிங்க்ஸ் போய் உங்கள் வசதிக்கு ஏற்ப வண்ணம் (color), லைன் திக்னஸ் (thickness) போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

Indicator Interpretation – எப்படி வாசிப்பது?

இந்த Indicator-ல்:

  • Green bars – புல்லிஷ் (Bullish) momentums-ஐ குறிக்கின்றன.
  • Red bars – பேரிஷ் (Bearish) momentums-ஐ குறிக்கின்றன.
  • Bar களின் color மாறும் இடம் முக்கியம். அதுவே trend reversal ஆரம்பமாக இருக்கலாம்.

எக்ஸாம்பிள்:

  • ஒரு இடத்தில் Green bars இருந்து Red bars-க்கு மாறினால், புல்லிஷ் trend முடிந்து, கன்சாலிடேஷன் அல்லது பேரிஷ் trend ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.
  • அதேபோல் Red இருந்து Green-க்கு மாறினால், புதிய புல்லிஷ் trend ஆரம்பிக்கக்கூடிய சிக்னல்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

  • இது ஒரு single confirmation indicator மட்டும்தான்.
  • இதைப் பயன்படுத்தும் முன், Backtesting செய்யவேண்டும்.
  • மேலும், மற்ற இரண்டு strong indicators-ஐ சேர்த்து மட்டுமே position எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • Accuracy level — medium.

முடிவுரை :

Accelerator Oscillator என்பது புது Indicator ஆக இருந்தாலும், சிறந்த Observational skills கொண்டு பயன்படுத்தினால் trend reversals-ஐ அடையாளம் காண உங்களுக்கு உதவும். ஆனால் இது மட்டும் போதாது. மற்ற indicators மற்றும் உங்கள் சொந்த அனுபவமும் சேர்ந்து செயல்பட வேண்டும்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 26535 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14063 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13435 views