பங்கு சந்தையில் Fat Finger மற்றும் Freak Trade-ஐ பற்றி தெரியுமா ?

Brokerage Free Team •July 12, 2025 | 1 min read • 17 views

 

பங்குச் சந்தையில் லாபகரமாக செயல்பட, முக்கியமான தகவல்களும், அரிதாக நிகழும் சில அபூர்வமான சூழ்நிலைகளும், மதிப்புமிக்க கற்றல் வாய்ப்புகளாக அமைகின்றன. இந்த பதிவில், பங்குச் சந்தையில் பெரிதும் பேசப்படும் இரண்டு முக்கிய நிகழ்வுகளை நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

 

  • Fat Finger
  • Freak Trade

 

இந்த இரண்டு வார்த்தைகளும், தொழில்முனைவோர்கள் மற்றும் ட்ரேடர்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொது சொற்களாகும். இருப்பினும், இவைகளின் உண்மையான பொருளும், நடைமுறை எடுத்துக்காட்டுகளும் அறியப்பட வேண்டியது அவசியம்; அப்போதுதான் இத்தகைய தவறுகளைத் தவிர்த்து செயல்பட முடியும்.

Fat Finger என்றால் என்ன?

Fat Finger எனப்படும் தவறு என்பது, ஒரு ட்ரேடர் அல்லது ப்ரோக்கர் பங்கு வாங்கும் அல்லது விற்கும் போது, எண்ணிக்கை அல்லது விலையை தவறாக உள்ளீடு செய்து, தவறான அளவில் அல்லது விலையில் ஆர்டர் இடுவதால் ஏற்படும் Human Error ஆகும்.

எடுத்துக்காட்டு:

ஒரு ட்ரேடர் 100 பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் தவறாக 1000 அல்லது 10,000 பங்குகளுக்காக order கொடுக்கிறார். ஏன்? காரணம் — 100க்கும் 1000க்கும் வித்தியாசம் ஒரு “Zero” தான். இது போன்ற Typing Mistake மூலம் சந்தை விலை தற்காலிகமாக ஏறி விடலாம் அல்லது கீழிறங்கலாம். இதே போன்று பங்கின் சந்தை விலை ₹300 இருக்க, ஒரு ட்ரேடர் தவறுதலாக ₹350க்கு பங்கு வாங்கி விட்டால், சந்தையில் உயர் விலை trade ஏற்படும்.

யாரால் இது ஏற்படலாம்?

  • Retail Traders தவறுதலாக சில நேரங்களில் இதைச் செய்கிறார்கள்.
  • ஆனால் பெரும்பாலான Fat Finger Errors பெரிய நிறுவனங்கள் மற்றும் Investment Institutions மூலமாகவே நடக்கும்.
  • சில நேரங்களில் இது algorithmic trading systems மூலமும் ஏற்படக்கூடும்.

Fat Finger Error-ன் விளைவுகள்:

  • சந்தையில் திடீர் price movement.
  • பெரும் Institutions-க்கு லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் நஷ்டங்கள்.
  • சில நேரங்களில் இந்த typing error மார்க்கெட்டையே பாதிக்கக்கூடிய அளவுக்கு இருக்கலாம்

Freak Trade என்றால் என்ன?

Freak Trade என்பது ஒரு பங்கு அல்லது குறியீட்டு மதிப்பு (Index) திடீரென அதிக அளவில் ஏறவோ அல்லது இறங்கவோ காரணமாகும் அசாதாரண விலை மாற்றம் ஆகும். இத்தகைய மாற்றங்கள் மிகக் குறுகிய நேரத்திலேயே (Seconds or Minutes ) நடைபெற்று, பங்கு மீண்டும் தனது இயல்பான விலைக்கு திரும்பும் தன்மை கொண்டதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு:

Nifty 50 Index 22,000-ல் trade ஆகிக்கொண்டிருக்கிறது. திடீரென்று சில seconds-க்கு அது 20,000-க்கு கீழே சென்றுவிடுகிறது — பிறகு மீண்டும் 22,000-க்கு திரும்புகிறது. இதுதான் Freak Trade.

இதற்கான காரணங்கள்:

  • Erroneous Large Order (தவறான அளவிலான பெரும் order)
  • System Glitch
  • Algo-trading mistake
  • Low liquidity in specific stocks

Freak Trade-ன் தாக்கங்கள்:

  • சில ட்ரேடர்களுக்கு unexpected profit/loss.
  • Short-term முதலீட்டாளர்களின் stop-loss களில் தானாக செயல்படும் ஆர்டர்கள் (stop-loss triggering) பெரிய அளவில் செயல்பட்டு, எதிர்பாராத நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும்.
  • Market volatility அதிகரிக்கிறது.

 

இது ஒரு rare event என்றாலும், பங்கு சந்தையில் time-sensitive trading செய்யும் நபர்களுக்கு இது மிக முக்கியமான விஷயம்.

இதுபோன்ற தவறுகளை SEBI மற்றும் NSE எப்படி தடுக்கிறது?

  • Price Band Limits – பங்குகளுக்கு வரம்பு விலைகள் (upper/lower circuits)
  • Trade Surveillance Mechanisms
  • Post-trade audits
  • Penalty for institutions if mistake repeats

முடிவுரை:

Fat Finger மற்றும் Freak Trade ஆகியவை பங்குச் சந்தையில் அரிதாக நடக்கும் என்றாலும், அதனால் ஏற்படும் தாக்கங்கள் மிகப்பெரியது. சந்தையை புரிந்து, தவறுகளை தவிர்த்து நிதானமாக முதலீடு செய்தால்தான் நீண்ட காலத்தில் வெற்றி பெற முடியும்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 29489 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14795 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13971 views