ஜெரோதா MTF-ல் 2025-ல் அறிந்துகொள்ள வேண்டிய புதிய விதிகள் மற்றும் அப்டேட்ஸ்!

Brokerage Free Team •June 2, 2025 | 1 min read • 26 views

 

ட்ரேடிங் அனுபவத்தை எளிதாக்கும் நோக்கத்தில், ஜெரோதா தொடர்ந்து பல அப்டேட்ஸ்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், இப்போது Margin Trading Facility (MTF)-க்கு சில முக்கியமான புதுப்பிப்புகள் (Updates) வந்துள்ளன. இந்த அப்டேட்ஸ் என்ன? அதை எப்படி பயன்படுத்தலாம்? இதனால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த வலைப்பதிவில் முழுமையாக பார்ப்போம்.

MTF என்றால் என்ன?

MTF என்பது மார்ஜின் டிரேடிங் பெசிலிட்டி. இதன் மூலம் நீங்கள் உங்கள் கையிருப்பில் இருக்கின்ற பணத்தைவிட கூடுதல் அளவில் பங்குகளை வாங்கி வைக்கலாம். இதற்கான ஒரு வரம்பை நிர்ணயித்து, ஜெரோதா கடன் வசதி தருகிறது.

முக்கியமான புதுப்பிப்புகள்

1. MTF-ஐ டெலிவரியாக மாற்றும் வசதி

முன்னதாக, MTF மூலம் வாங்கிய பங்குகளை நேரடியாக டெலிவரி ஹோல்டிங்க்ஸ்க்கு மாற்ற முடியாது. ஆனால் இப்போது, ஜெரோதா இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் சில கிளிக்ஸிலேயே MTF ஹோல்டிங்க்ஸை டெலிவரிக்குத் மாற்றிக்கொள்ளலாம்.

 

முக்கிய நிபந்தனை:

  • உங்கள் கணக்கில் முழு தொகை (Full amount) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • தேவையான தொகை இருந்தால், அந்த அளவிற்கு ஏற்ப பங்குகள் ஆட்டோமேட்டிக்காக டெலிவரியாக மாற்றப்படும்.
  • இந்த ரிக்வஸ்ட்டை மாலை 4 மணிக்கு முன்னர் கொடுத்தால், அதே நாளில் ப்ராசஸ் நடக்கும்.
  • 4 மணிக்குப் பிறகு கொடுத்தால், அதே ப்ராசஸ் அடுத்த நாளில் நடக்கும்.

 

Demo வழிமுறை:

  1. Kite Web-ல் Login செய்யவும்.
  2. Console > Portfolio > MTF Holdings கிளிக் செய்யவும்.
  3. மூன்று புள்ளிகள் (three dots) இருக்கும் – அதில் "Convert to Holdings" என்பதை தேர்வு செய்யவும்.
  4. Quantity நிரப்பி Confirm கொடுக்கவும்.

2. MTF லிமிட்டின் அதிகரிப்பு

இப்போது, ஜெரோதா MTF லிமிட்டை இன்கிரீஸ் செய்துள்ளது

  • ஒரே ஒரு பங்குக்கு 5 கோடி ரூபாய் வரை MTF வழங்கப்படும்.
  • ஒவ்வொரு அக்கௌண்ட் - க்கும் 25 கோடி வரை MTF பயன்படுத்தலாம்.

 

முக்கிய குறிப்பு:

  • மார்ஜின் ரெக்வையர்மெண்ட் அல்லது இன்ட்ரஸ்ட் ரேட் ஏதும் மாற்றப்படவில்லை.

3. அதிகமான பங்குகள் இப்போது MTF-க்கு எலிஜிபிள்

முன்னதாக சில பங்குகளுக்கே MTF கிடைத்தது. ஆனால் இப்போது பல பங்குகள் MTF-க்கு எலிஜிபிளாக உள்ளன.

  • சில பங்குகளுக்கு 2x லிவரேஜ்.
  • சில முக்கிய பங்குகளுக்கு 5x வரை லிவரேஜ் கிடைக்கும்.

இதனால், குறைந்த முதலீட்டில் கூட, பெரிய அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

4. GTT மற்றும் AMO ஆர்டர்கள் இப்போது MTF-ல் கிடைக்கும்

இப்போது MTF ஹோல்டிங்ஸில் GTT (Good Till Triggered) மற்றும் AMO (After Market Order) ஆர்டர்களையும் பயன்படுத்தலாம்.

 

GTT Demo:

  1. ஏதேனும் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள "Three Dots" ஐ கிளிக் செய்யவும். பிறகு "Create GTT" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  2. பின்னர், Trigger Type-ஐ (Single / OCO) தேர்வு செய்யவும்.
    அதற்குக் கீழே உள்ள "MTF" என்பதை செயல்படுத்தவும்.
  3. இந்த விருப்பத்தை செயல்படுத்தாமல் விட்டுவிட்டால், உங்கள் ஆணை (Order) MTF-ஆக இல்லாமல், சாதாரண (Normal) முறையில் செயல்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  4. Placed Order GTT-யில் சென்று Order Status ஐ சரிபார்க்கலாம். Stop Loss & Target செட் செய்யலாம்.

 

AMO Order:

  • சந்தை நேரம் முடிந்த பிறகு Order கொடுத்தால், அது AMO ஆக கருதப்படும்.

முடிவுரை : 

ஜெரோதா வழங்கும் இந்த புதிய MTF அப்டேட்ஸ், குறைந்த முதலீட்டில் அதிக பங்குகளை வாங்குவதற்கும், அதனை தேவைக்கேற்ப டெலிவரியாக மாற்றிக்கொள்ளவும், எளிதான வழிகளை வழங்குகின்றன. இவை அனைத்தும் ஒரு சாதாரண இன்வஸ்டருக்கும், அனுபவமுள்ள ட்ரேடருக்கும் மிகவும் பயனளிக்கக்கூடியவை.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 27354 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14273 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13587 views