பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஒரு நிறுவனம் எதிர்வரும் காலங்களில் எவ்வளவு வருமானம் (Revenue), லாபம் (Profit), வளர்ச்சி (Growth) ஆகியவற்றை எதிர்பார்க்கிறது என்பதைக் கொண்டு பலரும் அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கோ அல்லது விற்பதற்கோ முடிவெடுக்கிறார்கள். இதை நாம் "கைடன்ஸ்" (Guidance) என்று சொல்கிறோம்.
கைடன்ஸ் என்றால் என்ன?
கைடன்ஸ் என்பது ஒரு நிறுவனம் தனது எதிர்கால வருமானம், லாபம் மற்றும் வணிக வளர்ச்சி குறித்து முன்கூட்டியே அளிக்கும் ஒரு கணிப்பாகும். இது அனுமான அடிப்படையிலானதாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் நிர்வாக அனுபவம் மற்றும் சந்தை அறிவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கணிப்புகள் பெரும்பாலும் நம்பகமானவையாக இருக்கின்றன.
அதாவது, ஒரு நிறுவனம் வரக்கூடிய மாதங்கள் மற்றும் ஆண்டுகளில்,
- எவ்வளவு விற்பனை செய்யபோகிறார்கள்?
- எவ்வளவு வருமானம் இருக்கும்?
- ப்ராஃபிட் மார்ஜின் எவ்வளவு இருக்கும்?
- அவர்களின் தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றி கேள்வி எவ்வாறு இருக்கும்?
- அரசு கொள்கைகள் அவர்களுக்கு உகந்தவையாக அமையுமா, அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா?
இது போன்ற தகவல்களை முன்கூட்டியே அளிப்பதே Guidance ஆகும்.
கைடன்ஸ் எப்படி வழங்கப்படுகிறது?
- அந்தந்த காலாண்டு முடிவுகள் (Quarterly Results) வெளியாவும் நேரத்தில் நிறுவனங்கள் இந்த Guidance-ஐ வெளியிடுவார்கள். இது நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை அறிந்துகொள்ள உதவும்.
- உதாரணமாக, "ABC" என்ற நிறுவனம் தற்போதைய ஆண்டு ₹1,000 கோடி மதிப்பில் விற்பனை செய்திருக்கிறது. அடுத்த ஆண்டில் ₹2,000 - ₹3,000 கோடி வரை விற்பனை இருக்கக்கூடும் என்ற வகையில் அந்த நிறுவனம் தனது Guidance-ஐ வெளியிடும்.
- இதுபோன்ற தகவல்களால், முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தில் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்வார்கள்.
கைடன்ஸின் தாக்கம் பங்குகளின் மதிப்பில் எப்படி இருக்கும்?
- ஒரு நிறுவனம் எதிர்கால வளர்ச்சி குறித்து நேர்மறையான (Positive) கைடன்ஸ் அளித்தால், பெரும்பாலான நேரங்களில் அதன் பங்குக்கு சந்தையில் சாதகமான எதிர்வினை காணப்படும். சில சமயங்களில் பங்கு விலை கூட உயரக்கூடும்.
- மாறாக, ஒரு நிறுவனம் எதிர்மறையான (Negative) அல்லது பலவீனமான (Weak) கைடன்ஸ் அளித்தால், முதலீட்டாளர்கள் அதனை கவலையுடன் ஏற்க வாய்ப்பு உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் பங்கு விலையில் வீழ்ச்சி ஏற்படலாம்.
கைடன்ஸ் நம்முடைய முதலீட்டு முடிவுகளில் எப்படி உதவும்?
நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன், அதன் கைடன்ஸை கவனிக்க வேண்டும். மேலும் அந்த Guidance என்ன அளவுக்கு நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை Fundamental Analysis மூலம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
அதாவது:
- அந்த Guidance யதார்த்தமானதா?
- வெளிப்புற / உள் காரணிகள் (external/internal factors) அதைச் சாதகமாக ஆதரிக்கிறதா?
- அந்த நிறுவனம் கடந்த காலங்களில் கூறிய கைடன்ஸ் எவ்வளவு நிறைவேறியுள்ளது?
இந்த விஷயங்களை புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
கைடன்ஸ் பங்குசந்தையில் ஏன் முக்கியமானது?
- இது பங்கு மதிப்பில் உடனடி தாக்கம் ஏற்படுத்தும்.
- பங்குகள் குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் பயணிக்க இந்த அறிவிப்புகள் முக்கியமானதாக விளங்கும்.
- சில நிறுவனங்கள், தங்கள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், பங்கின் மதிப்பை நிலைத்திருக்கவும், கைடன்ஸ் அறிவிப்புகளை முக்கியமாக பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை :
Guidance என்பது பங்குசந்தையின் அடிப்படை கருவிகளில் ஒன்று. எந்த பங்கில் முதலீடு செய்வது? எப்போது விற்கலாம்? எவ்வளவு வரை வளர்ச்சி இருக்கக்கூடும்? என்பதற்கான ஒரு முக்கியமான வெளிச்சமாக Guidance விளங்குகிறது. இதை புரிந்து கொண்டு சிந்திப்பவர்களே, பங்குசந்தையில் நிலைத்த மற்றும் வெற்றிகரமான முதலீட்டாளர்களாக மாறுவார்கள்.
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.