நிதி சந்தையில் லோ ரிஸ்க் - ல் ஹை ரிவார்ட் எடுக்கலாம் என நினைக்கும் நிறைய பேர் ஆப்ஷன் ட்ரேடிங்கை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இதில் ஒவ்வொரு ஸ்ட்ராட்டஜியும் ஒரு ரிஸ்க்–ரிவார்டு ரேஷியோவுடன் வருகிறது. இந்த பதிவில் நாம் காணப்போகும் ஸ்ட்ராட்டஜி, பியரிஸ் டு புல்லிஷ் சந்தை நிலவரத்திற்கு ஏற்றது. அதாவது சந்தை மிதமான உயர்வு பெறும் அப்டேட்டுகளுக்குள் இருந்தால் அதிக லாபம் கிடைக்கும்.
ஸ்ட்ராட்டஜியின் நோக்கம்
இந்த ஸ்ட்ராட்டஜி, குறிப்பிட்ட ஒரு ரேஞ்சிற்குள் சந்தை முடிவடையும் (expiry) என நம்மால் கணிக்க முடிந்தால், அதில் இருந்து உச்சபட்ச லாபம் பெறும் வாய்ப்பு அளிக்கும். இது ஒரு புட் டோமினேட்டட் ஸ்ப்ரெட் ஸ்ட்ராட்டஜி (put dominated spread strategy) ஆகும், இதில் மூன்று முக்கியமான ஆக்சன்கள் உள்ளன.
- ஒரு ATM அல்லது நெருக்கமான புட்(put) பை (Buy)
- அதற்கு கீழே உள்ள இரண்டு புட்(put) செல் (Sell)
- மேலும் கீழே உள்ள ஒரு புட்(put) பை (Buy)
உதாரணம் - நிஃப்டி (NIFTY)
நிஃப்டி தற்போது 24,650-இல் உள்ளது என வைத்துக்கொள்வோம். நாம் உருவாக்கும் பாஸ்கெட்டில் உள்ள காம்பினேஷன்:
- Buy 24,650 PE – 1 லாட்
- Sell 24,600 PE – 2 லாட்
- Buy 24,550 PE – 1 லாட்
இது மூலமாக உங்களுக்கு கிடைக்கும்:
- அதிகபட்சம் லாபம் (Max Profit): ₹3,698
- அதிகபட்சம் இழப்பு (Max Loss): ₹53
இந்த ஸ்ட்ராட்டஜி பயன்படுத்தும் போது முக்கியமான விஷயம் என்ன என்றால், இது ஒரு Net Credit Strategy ஆகும். அதனால், பெரிய அளவிலான முதலீடு தேவையில்லை. ஆனால் “Sell” செய்யும் காரணத்தினால், அதற்கான ஒரு குறிப்பிட்ட அளவின் மார்ஜின் இருப்பது அவசியம்.
ஸ்ட்ராட்டஜி அனாலிசிஸ்
இந்த ஸ்ட்ராட்டஜி வெற்றியின் முக்கிய சூத்திரம் – எக்ஸ்பைரி அன்று நிஃப்டி 24,600 மற்றும் 24,650 ரேஞ்சுக்குள் முடிவடைய வேண்டும்.
- உங்கள் Break-Even Range: 24,580 முதல் 24,670 வரை (பிரைஸ் & ப்ரீமியம் அடிப்படையில் மாறும்)
- Probability of Profit (PoP): 8% எனினும், ரிஸ்க் மிக குறைவாக உள்ளது என்பதால் நீண்ட காலத்தில் இது ஒரு வெற்றிகரமான கன்ஸெர்வேட்டிவ் ஸ்ட்ராட்டஜி.
உதாரணம் - Bank Nifty
Bank Nifty இப்போது 55,500-இல் உள்ளது.
- Buy 55,500 PE – 1 லாட்
- Sell 55,000 PE – 2 லாட்
- Buy 54,500 PE – 1 லாட்
Result:
- Max Profit: ₹4,000+
- Max Loss: ₹1,443
இதில் நீங்கள் பயன்படுத்தும் மார்ஜின் ₹25,000 – ₹30,000 வரை இருக்கும். இது கூடுதல் அனாலிசிஸ் மற்றும் பாஸ்கெட் மூலம் கண்டறியலாம்.
நன்மைகள்:
- ரிஸ்க் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
- மேக்ஸிமம் லாஸ் தெரிந்திருக்கும்
- லிமிடெடட் மூவ் சந்தைகளுக்கு சிறந்தது
- பயிற்சி பெறுவதற்கும், பேப்பர் டிரேடிங் செய்வதற்கும் சிறந்தது
கவனிக்க வேண்டியவை:
- இந்த ஸ்ட்ராட்டஜி ஆரம்ப ட்ரேடர்களுக்கு அல்ல. ரிஸ்க் புரிந்துகொண்டு பயிற்சி பெற்ற பிறகு மட்டுமே லைவ் - ல் பயண்படுத்த வேண்டும்.
- சந்தை கீழ்நோக்கி அல்லது மிட் ரேஞ்ஜிலேயே முடிவடைய வேண்டும் என்ற கணிப்பை சரியாக செய்யவேண்டும்.
- பாஸ்கெட் அணிலிசிஸ் மற்றும் மார்ஜின் ரெக்வையர்மெண்ட் சரியாக கணக்கிட வேண்டும்.
Paper Trading :
இது போன்ற ஸ்ட்ராட்டஜிகளை முதலில் பேப்பர் டிரேடிங் செய்யவும். உங்கள் கணிப்புகள் சரியாக அமையும்போது மட்டுமே லைவ் ட்ரேடிங் செய்வது பாதுகாப்பானது.

முடிவுரை :
இந்த “Low Risk - High Reward Put Spread Strategy” என்பது குறைந்த இழப்பில் மிதமான லாபத்தை அடைய விரும்புபவர்களுக்கு ஏற்றது. நீங்கள் சந்தையை சரியாக கணிக்கக்கூடிய அனுபவமுடையவராக இருந்தால், இது ஒரு நல்ல தேர்வாக அமையும். நீங்களும் இந்த மாதிரி ஸ்ட்ராட்டஜிகளை paper trade செய்து பழகுங்கள். உங்கள் அனுபவத்தை வளர்த்த பிறகு மட்டுமே அதை ரியலான பணத்தில் மாற்றுங்கள்.
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.