பங்குசந்தையில் முதலீட்டாளர்கள் தினசரி சந்தையை கண்காணிக்க முடியாத சூழலில், தாங்கள் எதிர்பார்க்கும் விலையை அடைந்தவுடன் தானாகவே ஆர்டரை செயல்படுத்தும் வசதியாக GTT (Good Till Triggered) Order பயன்படுகிறது. இப்போது இந்த வசதி, Zerodha-வின் MTF (Margin Trading Facility) வசதியுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய நன்மையாகும்.
GTT ஆர்டர் என்றால் என்ன?
பொதுவாக நாம் ஒரு பங்கின் விலை குறைவாக வரும்போது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். ஆனால், அந்த விலை தினசரி வருமா என்பது நமக்கு தெரியாது. வழக்கமான Limit Order வைத்தால், அந்த நாளில் அந்த விலை வராவிட்டால், மார்க்கெட் முடிந்தவுடன் அந்த ஆர்டர் ரத்தாகிவிடும். மறுநாளில் நாம் மீண்டும் ஆர்டர் இட வேண்டி இருக்கும்.
இதற்கான சிறந்த மாற்றுதான் GTT ஆர்டர்.
- ஒரு GTT ஆர்டர் வைத்தால், அது 365 நாட்கள் வரை செல்லுபடியாக இருக்கும்.
- ஒரு முறை நாம் குறிப்பிட்ட விலை வந்தால் மட்டுமே, அந்த ஆர்டர் trigger ஆகும்.
- இதனால், தினசரி சந்தையை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், நமக்கு தேவையான விலையில் பங்குகள் வாங்கப்பட்டுவிடும்.
MTF (Margin Trading Facility) என்றால் என்ன?
Zerodha வழங்கும் MTF என்பது, முதலீட்டாளர்கள் குறைந்த முதலீட்டு தொகையுடன் பங்குகளை வாங்கும் வசதியாகும். இது long-term holdingக்கு உகந்தது.
- உதாரணமாக, ₹700 மதிப்புள்ள பங்குகளை வாங்க, நமக்கு ₹700 இல்லையெனில், சுமார் ₹160 மட்டுமே இருந்தாலே போதும், மீதி தொகையை Zerodha நமக்கு கடனாக (margin) வழங்கும்.
- அந்த பங்குகள் நம் holding-ல் இருக்கும்.
- ஆனால், நாம் வைத்த தொகையுடன் சேர்ந்து Zerodha வழங்கிய margin மீதான interest charges நாளுக்கு நாளாகச் சேரும். இதற்கான விவரங்கள் தங்கள் கணக்கில் தெளிவாக காட்டப்படும்.
இப்போது GTT + MTF எப்படி வேலை செய்யும்?
இந்த இரண்டையும் இணைத்து பயன்படுத்தும் வசதியை Zerodha சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- நாம் GTT ஆர்டர் வைக்கும் போது, அதை MTF மார்ஜின் மூலம் இடலாம்.
- இதன் மூலம், குறைவான தொகையை வைத்தே நீண்ட காலமாக செல்லுபடியாகும் ஆர்டரை உருவாக்கலாம்.
- ஒரே ஒரு click மூலம் Trigger Price மற்றும் Limit Price சேர்த்து உள்ளிட்டு, GTT-MTF ஆர்டர் உருவாக்கலாம்.
- ஒரு பங்கு விலை ₹700 இருந்தால், நமது trigger price ₹650 என்றால், ₹650 வந்தவுடன் அதில் MTF மூலம் ஆர்டர் கம்ப்ளீட் ஆகிவிடும்.
GTT Order இல் OCO வசதி
GTT ஆர்டருக்கு OCO (One Cancels Other) என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் உள்ளது:
- இதன் மூலம் Target Price மற்றும் Stop Loss Price இரண்டையும் சேர்த்து குறிப்பிடலாம்.
- முதலில் எது நடந்தாலும், மற்ற ஆர்டர் தானாகவே ரத்து செய்யப்படும்.
உதாரணம்:
- ₹1000-க்கு வாங்கிய பங்குக்கு ₹1200 target விலையும் ₹900 stop-loss விலையும் வைத்தால்,
- சந்தை ₹1200 சென்றால், லாபம் பெற்று exit ஆகும்; ₹900 சென்றால், இழப்பை கட்டுப்படுத்தி exit ஆகும்.
- இதில் முதலில் எந்த விலை வந்தாலும் மற்ற ஒன்று cancel ஆகும்.
யாருக்கு இது பயனளிக்கும்?
- தினசரி மார்க்கெட்டை கண்காணிக்க முடியாதவர்கள்
- குறிப்பிட்ட விலையில் பங்குகளை வாங்க/விற்பனை செய்ய விரும்புபவர்கள்
- குறைந்த தொகையுடன் Margin மூலம் முதலீடு செய்ய விரும்புபவர்கள்
- Automation விரும்பும் பங்குசந்தை ஆர்வலர்கள்

முக்கிய குறிப்பு
MTF பயன்படுத்துவதற்கு நீங்கள் முதலில் MTF வசதியை account-இல் enable செய்ய வேண்டும். இப்போது NSE-யில் தேர்வு செய்யப்பட்ட சில பங்குகளுக்கே MTF + GTT பயன்படுத்த முடியும். எந்தெந்த பங்குகள் இதற்குப் பயன்படும் என்பதை நீங்கள் Zerodha-வின் MTF அங்கீகாரம் பெற்ற பங்குகளின் பட்டியலில் பார்க்கலாம்.
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.