ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் எப்போது ஏறும் அல்லது இறங்கும்?

Brokerage Free Team •July 8, 2025 | 1 min read • 29 views

 

பங்குசந்தையில் முதலீடு செய்யும் போதோ, ட்ரேடிங் செய்யும் போதோ, ஒரு முக்கியமான கேள்வி அனைவருக்குமே தோன்றும்:

"ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் எப்போது ஏறும் அல்லது எப்போது இறங்கும்?"

இந்தக் கேள்விக்கு பதில் தரக்கூடிய சில முக்கியமான காரணிகளைப் பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

ஏற்ற இறக்கத்திற்கு காரணமான முக்கியமான மூன்று காரணிகள் :

பங்குசந்தை ஒரு இடைவெளியில்லா இயக்கத்தில் உள்ளது. அதன் ஏற்றம் மற்றும் இறக்கம் பல காரணிகளால் ஏற்படுகிறது. ஆனால் daily traders, short term investors கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான காரணிகள் இவை:

1. முந்தைய நாளின் உயர் விலையில் க்ளோஸ்(close) ஆகுதல் :

ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் முந்தைய நாளின் high விலையைத் தாண்டி அந்த நாளின் முடிவில் (close) மேலே க்ளோஸ் ஆகிறது என்றால், அதில் ஒரு குறுகிய கால ஏற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
உதாரணமாக, ஒரு ஸ்டாக் day 1-ல் ₹23.50 என்ற ஹையைக் தொட்டது, day  2-ல் ₹23.30 வரை ட்ரேட் ஆகி, அந்த ₹23.50 ஹையை மீறி க்ளோஸ் ஆகிறது என்றால், இது ஸ்டாக் மேலே செல்லக்கூடிய சாத்தியத்தை அதிகரிக்கிறது.

2. சமீபத்திய வார ஹையை (high) மீறுதல் :

மீண்டும், ஒரு ஸ்டாக் சமீபத்திய வார ஹையை தாண்டி மேலே கிளோஸ் ஆகும் போது, அது ஒரு முக்கியமான bullish signal ஆக இருக்கலாம். வார ஹைகளை தாண்டுவது சந்தையில் வலிமையை காட்டும்.

3. சமீபத்திய மாத ஹையை மீறுதல் :

அதேபோல, சமீபத்திய மாத ஹையையும் ஸ்டாக் தாண்டி க்ளோஸ் ஆகும் போது, அது ஒரு பெரிய ப்ரேக் அவுட் ஆக இருக்கலாம். இது மீடியம் டேர்ம் இன்வெஸ்டர்களுக்கு (medium term investor) ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கக்கூடும்.

சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டி :

மேலுள்ள மூன்று ஹை நிலைகளை (day high, week high, month high) தொடர்ந்து தாண்டி, ஸ்டாக் மேலே கிளோஸ் ஆகிறதா என கவனித்தால், அதனால் ஏற்படும் price breakout-ஐ முன்கூட்டியே புரிந்துகொண்டு, நல்ல முடிவுகளை எடுக்கலாம்.
அதே சமயத்தில், ஒரு ஸ்டாக் வீக் ஹைக்கு கீழே தொடர்ந்து ட்ரேட் ஆனால், அது கீழ்வரும் சாத்தியத்தை காட்டும்.

யார் இந்த முறையை பின்பற்ற வேண்டும்?

இந்த முறைகள் முக்கியமாக:

  • டே ட்ரேடிங் செய்யும் நபர்களுக்கும்,
  • ஷார்ட் டேர்ம் & மீடியம் டேர்ம் முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது லாங் டேர்ம் முதலீட்டாளர்களுக்கானது அல்ல, அவர்கள் பட்ஜெட், PE Ratio, growth, debt போன்ற fundamental analysis அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும்.

முடிவுரை :

பங்குசந்தையில் முதலீடு அல்லது ட்ரேடிங் செய்யும் முன், விலையின் பழைய உயரங்களை (ஹை) அடிப்படையாக வைத்து அனலைஸ் செய்தால், அதன் ஏற்றம் அல்லது இறக்கம் குறித்த முன்னேற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த சிறிய உத்திகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் முதலீட்டில் நிச்சயமாக முன்னேற்றத்தை காண முடியும்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 29490 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14796 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13972 views