இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான HDFC குழுமம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக முக்கியமான IPO ஒன்றை கொண்டு வருகிறது. இந்த IPO யை வெளியிடும் நிறுவனம் தான் HDB Financial Services Ltd, இது ஒரு முன்னணி NBFC (Non-Banking Financial Company) ஆகும். இந்த வலைப்பதிவில், அந்த IPO பற்றிய முழுமையான தகவல்களையும், முதலீட்டாளர்கள் ஏன் கவனிக்க வேண்டும் என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
HDB Financial Services :
HDB Financial Services என்பது வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், இது வாடிக்கையாளர்களுக்கும் தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பலவகை சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக, இவர்கள் வழங்கும் நிதி சேவைகள்:
- எண்டர்பிரைஸ் (வணிக) கடன்கள்
- வாகனக் கடன்கள்
- கன்ச்யூமர் லோன்கள் (தனிநபர் தேவைக்கான கடன்கள்)
இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 1,772 கிளைகள் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இது இந்தியாவில் உள்ள முன்னணி NBFC நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
நிறுவனத்தின் வளர்ச்சி நிலவரம் :
HDB Financial Services கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக வளர்ந்துள்ளது. ஆண்டுவாரியாக அதன் நிகர லாப வளர்ச்சி பின்வருமாறு:
ஆண்டு
|
நிகர லாபம் (Profit After Tax)
|
2022
|
₹1,011 கோடி
|
2023
|
₹1,959 கோடி
|
2024
|
₹2,460 கோடி
|
2025
|
₹2,176 கோடி (முந்தைய காலாண்டு தரவுகள் அடிப்படையில்)
|
இதிலிருந்து நமக்கு தெளிவாக புரியும் விஷயம் என்னவென்றால் – நிறுவனம் ஆண்டுதோறும் வியப்பளிக்கும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. Year-on-Year (YoY) அடிப்படையில் அதன் வருமானமும், லாபமும் உயர்வடையக்கூடிய வழியில் உள்ளது.
IPO விவரங்கள் :
இந்த நிறுவன IPO மிக முக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது பெரும் அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியவை. இதோ அதன் முக்கிய அம்சங்கள்:
இந்த IPO வின் மொத்த அளவு ₹12,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ரைஸ் பேண்ட் என்பது ஒரு ஷேருக்கு ₹700 முதல் ₹740 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 20 ஷேர்கள் அடங்கும். எனவே, ஒரு லாட்டுக்கு முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை ₹14,000 முதல் ₹15,000 வரை இருக்கும். இந்த IPO 2025ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி திறக்கப்படுகிறது, மேலும் 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அலாட்மெண்ட் தேதிகள் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. IPO லிஸ்டிங் தேதி ஜூலை 1 அல்லது ஜூலை 2 எனும் தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் நடைபெறும் வாய்ப்புள்ளது.
யார் யார் அப்ளை செய்யலாம்?
இந்த IPO யில் பொது முதலீட்டாளர்கள் (Retail Investors), HDFC Bank இல் ஏற்கனவே ஷேர் வைத்திருப்பவர்கள், மற்றும் பிற வகை முதலீட்டாளர்களும் அப்ளை செய்யலாம். HDFC Bank ஷேர் ஹோல்டர்ஸ் வைத்திருப்பவர்களுக்கு தனித்தனியான Shareholders quota எனப்படும் சிறப்பு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான சில நிபந்தனைகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
முக்கிய ஆலோசனை:
இந்த IPO பற்றிய இந்த வலைப்பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் கற்றறியும் நோக்கத்திற்காக மட்டுமே. இது பங்குகளை வாங்கும் அல்லது விற்கும் பரிந்துரை அல்ல. நீங்கள் எந்த முதலீட்டையும் செய்வதற்கு முன் உங்கள் சார்பாகத் தேவையான ரிசர்ச் (Research/Analysis) செய்து, சிந்தித்த பின் முடிவெடுப்பது மிகவும் அவசியம்.
உங்களிடம் டிமேட் அக்கவுண்ட் இல்லையா? :
இந்த IPO ல் பங்கேற்க நீங்கள் கட்டாயமாக ஒரு Demat Account வைத்திருக்க வேண்டும். உங்களிடம் Demat Account இல்லையென்றால், Zerodha போன்ற முன்னணி புரோக்கர் நிறுவனத்தின் வழியாக எங்களிடம் தமிழில் முழு ஆதரவுடன் டிமேட் அக்கவுண்ட் திறக்கலாம்.

முடிவுரை:
இந்த IPO என்பது HDFC குழுமத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு IPO ஆகும். அதன் நிறுவனம் HDB Financial Services, வளர்ச்சியிலும் நம்பிக்கையிலும் முன்னிலையில் உள்ளது. முதலீட்டாளர்களாகிய நீங்கள் இப்போது சரியான தருணத்தில் இருக்கிறீர்கள். நேரத்தை தவறவிடாமல், ஆராய்ந்து, திட்டமிட்டு முதலீடு செய்யுங்கள்.
Discalimer!
The content provided in this blog article is for educational purposes only. The information presented here is based on the author's research, knowledge, and opinions at the time of writing. Readers are advised to use their discretion and judgment when applying the information from this article. The author and publisher do not assume any responsibility or liability for any consequences resulting from the use of the information provided herein. Additionally, images, content, and trademarks used in this article belong to their respective owners. No copyright infringement is intended on our part. If you believe that any material infringes upon your copyright, please contact us promptly for resolution.